நிலத்தை தோண்டும்போது கிடைத்த ராட்சத எலி சிலை: தொழிலாளர்கள் அதிர்ச்சி!

நிலத்தை தோண்டும்போது கிடைத்த ராட்சத எலி சிலை: தொழிலாளர்கள் அதிர்ச்சி!

நிலத்தை தோண்டும்போது கிடைத்த ராட்சத எலி சிலை: தொழிலாளர்கள் அதிர்ச்சி!

மெக்சிகோவில் நிலத்தடி வடிகால் அமைப்பதற்காக மண்ணை தோண்டியபோது ராட்சத எலி சிலை ஒன்று இருந்ததைப் பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மண்ணை தோண்டும்போதுதான் புதைந்துபோன நாகரீகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு ஹராப்பா,மொஹஞ்சதாரோ நாகரீங்களே சாட்சி. தமிழகத்தின் கீழடியும் அப்படித்தான். மண்ணைத் தோண்டினால் நாகரீகங்கள், நீர், கச்சா எண்ணை மட்டுமல்ல இப்படி அதிசயங்களும் நிகழ்வதுண்டு.

அப்படித்தான் மெக்சிகோவில் நிலத்தடி வடிகால் அமைக்க மண்ணை தோண்டும் பணியில் இருந்த தொழிலாளர்கள் பெரிய எலி சிலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அதனை வெளியே எடுத்து கழுவி வைத்துள்ளனர்.

இந்த எலி சிலையை பொதுமக்கள் வந்து பார்வையிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், லோபஸ் என்ற பெண் ஒருவர், ’அது தனது வீட்டில் இருந்த எலி சிலை. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது’ என்று உரிமைக்கோரியுள்ளார். கடந்த சனிக்கிழமை வெளியான இந்த வீடியோவை இதுவரை 5 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com