சீனாவின் தென் மேற்கு மாகாணமான சிச்சுவானில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதால் மெக்சிகன் நகர நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிச்சுவானில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. சாலைகளில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த போதே நிலச்சரிவு ஏற்பட்டு சாலையை மண் மூடியது. இதில் யாரும் காயமோ, உயிர்ச்சேதமோ இன்றி உயிர்தப்பினர். இதனால் மெக்சிகன் கவுண்டி பகுதிக்கு செல்லும் போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் முற்றிலும் முடங்கியது. தகவலறிந்த போக்குவரத்து துறையினர் மற்றும் அவசர குழுவினர் சாலையில் பரவியிருந்த மண் மற்றும் கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.