\
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'லேண்ட் ரோவர்' சொகுசு ரக காரில் இளவரசர் பிலிப்பின் இறுதி ஊர்வலம்

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'லேண்ட் ரோவர்' சொகுசு ரக காரில் இளவரசர் பிலிப்பின் இறுதி ஊர்வலம்

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'லேண்ட் ரோவர்' சொகுசு ரக காரில் இளவரசர் பிலிப்பின் இறுதி ஊர்வலம்
Published on: 

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் கணவரும், பிரிட்டிஷ் அரச குடும்ப இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அவருக்கு வயது 99. வரும் 17ஆம் தேதியன்று அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளது. அவரது இறுதி ஊர்வலம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட லேண்ட் ரோவர் சொகுசு ரக காரில் நடைபெற உள்ளது. அந்தக் காரில் அவரது உடலை தாங்கி செல்லும் சவப்பெட்டி வைக்கப்படவுள்ளது. 

இந்தக் காரை அவரே மறுவடிவமைப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தக் காரை அவர் மறுவடிவமைத்துள்ளார். அதுவும் இந்தக் காரில்தான் தனது இறுதி ஊர்வலம் அமைய வேண்டும் என நினைத்து, அவர் இதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு இந்த இறுதி ஊர்வலத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் அரச குடும்பம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com