\
கம்போடியா: கண்ணிவெடி தேடுதலுக்கு உதவிய எலிக்கு பணி ஓய்வு

கம்போடியா: கண்ணிவெடி தேடுதலுக்கு உதவிய எலிக்கு பணி ஓய்வு

கம்போடியா: கண்ணிவெடி தேடுதலுக்கு உதவிய எலிக்கு பணி ஓய்வு
Published on

கம்போடியாவில் கண்ணி வெடிகள் மற்றும் வெடி பொருட்களை கண்டறிய உதவி வந்த பெரிய வகை எலிக்கு பணிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

7 வயது நிரம்பிய மகாவா எனப் பெயரிடப்பட்ட இந்த எலி, இதுவரை 71 கண்ணி வெடிகளையும், 12 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. மகாவாவின் மெச்சத்தக்க சேவைக்கு துணிச்சல் மிக்க விலங்கு என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

உருவத்தில் மிகச்சிறியதாக இருப்பினும் ஏராளமான மக்களின் உயிரைக் காத்த மகாவாவுடன் பயணித்தது மிகவும் பெருமை என அதனைப் பராமரித்து கையாண்டு வந்த மலென் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com