\
உடல்நிலை கருதி நவாஸ் ஷெரிஃப்பிற்கு ஜாமீன்

உடல்நிலை கருதி நவாஸ் ஷெரிஃப்பிற்கு ஜாமீன்

உடல்நிலை கருதி நவாஸ் ஷெரிஃப்பிற்கு ஜாமீன்
Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பிற்கு ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் ஊழல் தொடர்பான வழக்கிலும், சர்க்கரை ஆலை வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது நவாஸ் ஷெரிஃப்பின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இவரின் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.  

இதனால், சர்க்கரை ஆலை வழக்கில் உடல்நிலை கருதி ஜாமீன் வழங்க வேண்டும் என்று லாகூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் நவாஸ் ஷெரிஃப்பிற்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பு அளித்துள்ளனர். எனினும் நவாஸ் ஷெரிஃப் ஊழல் வழக்கில் இன்னும் ஜாமீன் பெறாததால் அவர் காவல்துறையினர் கட்டுபாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் ஊழல் வழக்கு தொடர்பான ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமை விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com