பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது எனக் கூறி துருக்கியில் பெண்கள் மாபெரும் பேரணி நடத்தினர்.
இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பேரணியில், “எங்களின் ஆடைகள் குறித்து நீங்கள் கட்டளையிடாதீர்” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பெண்கள் ஏந்திச் சென்றனர். கடந்த மாதம் குட்டை பாவாடை அணிந்து சென்றதற்காக பெண் ஒருவர் மீது பொது இடத்தில் ஆண்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் துருக்கி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.