உலகம்
ட்ரம்பைப் பின்பற்றும் குவைத்: பாக். உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விசா வழங்கத் தடை
ட்ரம்பைப் பின்பற்றும் குவைத்: பாக். உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விசா வழங்கத் தடை
பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கத் தடை விதிப்பதாக குவைத் அறிவித்துள்ளது.
சிரியா, லிபியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்தவாரம் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில் சிரியா, ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று குவைத் அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பயணிகள் போர்வையில் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.