அபுதாபி லாட்டரியில் கொல்லம் பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு

அபுதாபி லாட்டரியில் கொல்லம் பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு

அபுதாபி லாட்டரியில் கொல்லம் பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு
Published on

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த லாட்டரியில் கொல்லத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு விழுந்துள்ளது.

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் சொப்னா நாயர். கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து தன் கணவர் மற்றும் குழந்தையுடன் அபுதாபியில் வசித்து வருகிறார். அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர், சமீபத்தில் லாட்டரி சீட்டு வாங்கினார். அதற்கு 12 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.22 கோடி ரூபாய்.  இதனால் அதிர்ச்சி அடைந்த சொப்னா, அதில் இருந்து இன்னும் மீளவில்லை.


இதுபற்றி அவர் கூறும்போது, ‘’நான் எப்போதும் லாட்டரி சீட்டு வாங்க மாட்டேன். இதுவரை மொத்தமே மூன்று அல்லது நான்கு முறைதான் வாங்கியிருப்பேன். இப்போது கூட வாங்கியதை மறந்துவிட்டேன். என் கணவரிடம் கூட தெரிவிக்கவில் லை.  பரிசு விழுந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். என் கணவரிடம் தெரிவித்ததும் அதிர்ச்சி அடைந்தார்’’ என்றார். 

’’பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு உதவ வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு. அதற்கு இந்த பணத்தை பயன்படுத்து வேன்’’ என்று தெரிவித்துள்ளார் சொப்னா. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com