கொச்சி: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; கைதான நபர் சொன்ன அதிர்ச்சி பின்னணி.. ஷாக் ஆன போலீசார்!

விமானத்தில் பயணம் செய்யவிருந்த மலப்புரத்தைச்சேர்ந்த முப்பதுவயதான ஹுஹைப் என்ற இளைஞர்தான் இந்த புரளிக்கு காரணம் என்று போலிசாருக்கு தெரியவந்தது.
கொச்சி விமானநிலையம்
கொச்சி விமானநிலையம்கூகுள்

கொச்சியிலிருந்து லண்டன் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு புரளி கொடுத்தவர் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியிலிருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியாவிமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதே சமயம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்று போலிசார் விசாரணை செய்கையில், அவர்களுக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்தது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியாஎக்ஸ்

காரணம் அதே விமானத்தில் பயணம் செய்யவிருந்த மலப்புரத்தைச்சேர்ந்த முப்பது வயதான ஹுஹைப் என்ற இளைஞர்தான் இந்த புரளிக்கு காரணம் என்று போலிசாருக்கு தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்த போலிசாருக்கு மேலும் சில தகவல்கள் தெரியவந்தன.

அதன்படி ஹுஹைப் சில வாரத்திற்கு முன் தனது குடும்பத்துடன் லண்டனிலிருந்து கொச்சிக்கு வந்துள்ளார். இவர்களின் அந்த பயணத்தில் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்ட இவரது குழந்தைக்கு ஃபுட்பாய்ஸன் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து குழந்தை கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்பட்டிருக்கிறது.

கொச்சி விமானநிலையம்
“எந்த நேரம் வேண்டுமானாலும் குண்டு வெடிக்கலாம்” - கோவை விமான நிலையத்திற்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்

இந்நிலையில், இவர்கள் மீண்டும் லண்டனுக்கு செல்ல நினைத்து ஏர் இந்திய விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் குழந்தைக்காக அவர்கள் இன்னும் சில நாட்கள் கொச்சியில் இருக்கவேண்டி வந்துள்ளதால், ஹுஹைப் ஏர் இந்திய நிறுவனத்திடம் தங்களது டிக்கெட்டை அடுத்த வாரத்திற்கு மாற்றி கொடுக்க சொல்லி கேட்டு இருக்கிறார். இதற்கு ஏர் இந்தியா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவர் எவ்வளவோ வலியுறுத்தி கேட்ட போது ஏர் இந்தியா செவிகொடுக்கவே இல்லை. இதில் கோபம் கொண்ட ஹுஹைப் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இவரை கைது செய்த போலிசார் இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com