எந்தெந்த நேரத்தில் உலகநாடுகள் புத்தாண்டை வரவேற்கும் தெரியுமா?
2025ஐ வரவேற்க உலகமே காத்திருக்கும் நிலையில், முன்னதாக கிரிபாட்டி தீவானது புத்தாண்டை கொண்டாடியது.
புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடு கிரிபாட்டி தீவு. இந்த தீவானது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இதி கிரிபட்டி தீவு அல்லது கிறிஸ்துமஸ் தீவு என்று கூறுவர். இந்த தீவின் புத்தாண்டு கொண்டாட்டமானது இந்தியாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை விட எட்டரை மணி நேரம் முன்னதாக நடைபெறும். அதாவது கிரீன்விச் நேரத்தை விட 14 மணி நேரம் முன்னதாக அமைந்துள்ளது.
புத்தாண்டை கொண்டாடும் விதமாக மக்கள் வாணவேடிக்கை மற்றும் இசையுடன் புத்தாண்டை வரவேற்றனர். கிரிபாட்டிக்கு பிறகு நியூசிலாந்து டோகெலாவ் மற்றும் டோங்கா போன்ற பசிபிக் தீவுகளில் புத்தாண்டானது கொண்டாடப்பட்டு வருகிறது.
புத்தாண்டை வரவேற்கும் நாடுகளின் பெயரும் நேரமும்,
இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கி கிரிபதியும், 4.30 மணிக்கு நியூசிலாந்தும், 5.30 மணிக்கு பிஜி, ரஷ்யாவும், இரவு 8.30 மணிக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் இரவு 9.30 மணிக்கு சீனா, மலேசியா சிங்கப்பூர் ஹாங்காங் பிலிப்பைன்ஸும். பிறகு இந்தியாவும் புதுவருடத்தை வரவேற்கும் நாடுகள் ஆகும்.
இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு UAE, ஓமன், அஜர்பைஜான் நாடுகளும், அதிகாலை 3.30 மணிக்கு கிரீஸ், தென்னாப்பிரிக்கா, சைப்ரஸ், எகிப்து, நமீபியா நாடுகளும், 4.30 மணிக்கு ஜெர்மனி, பிரான்ஸ் இத்தாலி சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, மொராக்கோ, காங்கோ, மாட்டா ஆகையவை புத்தாண்டை வரவேற்கும் நாடுகள்.
நாளை காலை 5.30 மணிக்கு யுகே, அயர்லாந்து, போர்ச்சுகலும்,
காலை 8.30 மணிக்கு பிரேசில், அர்ஜெண்டினா, சிலி நாடுகளும் புத்தாண்டை கொண்டாடுகின்றன.
காலை 9.30 மணி நேரத்தில் புவேர்ட்டோ ரிக்கோ, பெர்முடா, வெனிசுலா, யுஎஸ் விர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் புத்தாண்டை வரவேற்கின்றன.
காலை 10.30 மணிக்கு யுஎஸ் ஈஸ்ட் கோஸ்ட் பெரு பாஹாம், சியுபாவும், காலை 11.30 மணியளவில் மெக்ஸிகோ மற்றும் கனடாவின் சில பகுதிகளும் புத்தாண்டை வரவேற்கும் நாடுகளாகும்.
பிற்பகல் 1.30 லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோவும், மாலை 3.30 க்கு ஹவாய் பிரெஞ்சு பாலினேசியா நாடும் மாலை 4.30 மணிக்கு சமோவாவும் தங்களது புத்தாண்டு தினத்தை வரவேற்கும் நாடுகளாகும்.