’’என்னப்பா! இந்த பேனா இப்படி கசியுது??’’.. பொறுமையை இழந்து எழுந்து சென்ற மன்னர் சார்லஸ்!
கடந்த செப்டம்பர் 8ம் தேதி இரண்டாம் எலிசபெத் மறைந்ததைத் தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னரானார்.
வடக்கு அயர்லாந்தில் அதிகாரிகள் தங்கும் மாளிகையான ராயல் ஹில்ஸ்பரோவில் நடந்த விழாவுக்குச் சென்ற மூன்றாம் சார்லஸ், அங்கிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்ட போது அவர் பயன்படுத்திய பேனாவிலிருந்து இங்க் கசிந்ததால், சார்லஸ் கோபமடைந்தார்.
அந்த மளிகையில் உள்ள நுழைவு புத்தகத்தில் கையெடுத்திடும் போது, பேனாவிலிருந்து இன்ங் கசிந்தது , ‘’ அட கடவுளே, இந்த பேனாவைத் தான் வெறுக்கிறேன்.. இதுபோன்று நடப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது..” என்று பேசி கோபமாக எழுந்தார். எழுந்து நின்றவர் உடனே அருகிலிருந்த மனைவி கன்சார்ட் கமீலாவிடம் பேனாவைக் கொடுத்தவுடன், அவரது மனைவி கன்சார்ட் கமீலா அதை வாங்கி பார்த்தவுடன், ‘’ பார்.. அது எல்லா இடங்களிலும் வழிகிறது” என்று தனது விரல்களைத் துடைத்தபடி கூறினார். இப்படி மூன்றாம் சார்லஸ் கோபடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும் - https://twitter.com/i/status/1569785614332985354
ஊடகங்கள் சுற்றி இருக்கும் போது, தனது பொறுமையை இழப்பது மூன்றாம் சார்லஸுக்கு இது முதல் முறையல்ல. பதவியேற்கும் நிகழ்வின் போதும் கூட இதுபோன்று சம்பவம் நடந்தது. அப்போது, ‘’ தனது உதவியாளர் மீது எரிச்சல்பட்டுக்கொண்டே, ஒரு சைகைக்காட்டி மேசையையிலிருந்த பேன் பாக்ஸை எடுக்க சொன்னார். மூன்றாம் சார்லஸின் இந்த பொறுமையின்மை சற்று நெருடலாக இருப்பதாக பிரிட்டன் மக்கள் கருத்துகள் பகிர்ந்து வருகிறார்கள்.