தலையில் பேண்டேஜூடன் கிம்ஜாங் உன்: வடகொரிய அதிபருக்கு என்ன ஆச்சு?

தலையில் பேண்டேஜூடன் கிம்ஜாங் உன்: வடகொரிய அதிபருக்கு என்ன ஆச்சு?

தலையில் பேண்டேஜூடன் கிம்ஜாங் உன்: வடகொரிய அதிபருக்கு என்ன ஆச்சு?
Published on

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தலையில் பேண்டேஜூடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து அவரது உடல்நிலை குறித்து மீண்டும் பல கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

கடந்த 30-ஆம் தேதி வடகொரியா அரசு தொலைக்காட்சியில் கிம் ஜாங் உன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. அப்போது தலையின் பின்பக்கத்தில் அவர் பேண்டேஜ் அணிந்திருந்தது தெரிய வந்தது. எனவே அவருக்கு தலையில் அடிபட்டதா இல்லை அறுவை சிகிச்சை ஏதேனும் நடந்ததா என உலக நாடுகள் ஊகிக்க தொடங்கியுள்ளன.

வடகொரியாவில் அணு ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதால், அதன் அதிபர் கிம்முக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அவை யாரின் கட்டுப்பாட்டுக்கு செல்லும், அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என உலக நாடுகள் கவலைப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com