“அமெரிக்கா தடைகளை தளர்த்தாவிட்டால்..?” - கிம் ஜாங் உன் எச்சரிக்கை

“அமெரிக்கா தடைகளை தளர்த்தாவிட்டால்..?” - கிம் ஜாங் உன் எச்சரிக்கை
“அமெரிக்கா தடைகளை தளர்த்தாவிட்டால்..?” - கிம் ஜாங் உன் எச்சரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள தடைகளை தளர்த்தாவிட்டால், அணு ஆயுதங்களை கைவிடும் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள நேரிடும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பான், தென்கொரியா போன்ற ‌அமெரிக்காவின் நட்பு நாடுகளின் வான் வழியாக ஏவு‌ணைகளை செலுத்தி, வடகொரியா மிரட்டியதால், கொரிய தீபகற்பத்தில் எந்த நேரமும் போர் ஏற்படும் அபாயம் சூழ்ந்தது. நிச்சயம் போர் நடக்கும் என அரசியல் வல்லுநர்கள் கணித்திருந்த சூழலில், அந்த எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது. மாறிமாறி வசைபாடிக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், புகழ்பாட தொடங்கியதும், அனைத்து காட்சிகளும் தலைகீழாக மாறியன.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கிம் ஜாங் உன் வாக்குறுதியளித்திருந்தார். பதிலுக்கு தங்கள் நாட்டின் மீதான தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். 

கிம் ஜாங் உன் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக ட்ரம்பும் உறுதி அளித்திருந்தார். ஆனால், அதற்குப் பின் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களை கைவிடும் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார். 

புத்தாண்டை முன்னிட்டு வடகொரியா தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர்‌ கொரிய தீபகற்பத்தின் நலனுக்காக ட்ரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், சர்வதேச சமூகம் வரவேற்கும் வகையிலான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com