மீண்டும் ட்ரம்பை சந்திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங்

மீண்டும் ட்ரம்பை சந்திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங்
மீண்டும் ட்ரம்பை சந்திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங்

சிங்கப்பூரில் நடந்த சந்திப்பை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை மிரட்டி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், திடீரென அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பை கைவிட முடிவு செய்வதாக அறிவித்தார். மேலும் கடந்த ஜூன் 12 ஆம்‌ தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பை, சிங்கப்பூரில் சந்தித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனையில் ஈடுபட்டார். 

இந்நிலையில், அதே போன்று இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிடம் இருந்து நேர்மறையான கடிதம் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கிம் ஜாங் உன் கேட்டுக் கொண்டபடி இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாட்டை தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com