'நான் ரொம்ப சுத்தம்' சிங்கப்பூரில் கழிவறையுடன் கிம் !
சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசியுள்ளனர். வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இந்த சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் இன்று நடைப்பெற்றது. இந்தச் சந்திப்புக்காக இரு நாள்களுக்கு முன்பே சிங்கப்பூர் வந்தார் கிம் ஜான் உன். அதிகம் சுத்தம் பார்க்கும் கிம்முக்காக அவரின் பாதுகாப்பு வீரர்கள் வட கொரியாவில் இருந்து தனி கழிவறை கோப்பையும் கொண்டு வந்துள்ளனர்.
சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. கிம்முக்கு கழிவறை கொண்டு செல்வது ஒன்றும் புதிதல்ல. இதேபோல கடந்த முறை தென் கொரியாவுக்கு சென்ற போதும், கிம் பாதுகாப்பு படையினர் கழிவறை கோப்பையை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அதிகளவிலான பாதுகாப்புக்கும் குறைவில்லாமல்தான் சென்றார் கிம் ஜாங் முன்.