வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியான இயந்திரங்கள் : வடகொரிய அதிபருக்கு இதய அறுவை சிகிச்சை ?

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியான இயந்திரங்கள் : வடகொரிய அதிபருக்கு இதய அறுவை சிகிச்சை ?
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியான இயந்திரங்கள் : வடகொரிய அதிபருக்கு இதய அறுவை சிகிச்சை ?

வடகொரிய அதிபர் கின் ஜங் உன்னின் இதய அறுவை சிகிச்சைக்காக வெளிநாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாடுகளுக்கு அச்சமளிக்கும் வகையில் ஏவுகணைகளின் பரிசோதனைகளை நடத்தி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து அண்மைக்காலமாக பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் மர்மமாக இருக்கின்றன. கிம் ஜாங் உன்னிற்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தகவல்களை உறுதி செய்திருக்கும் தென் கொரிய செய்தி நிறுவனங்கள், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளன. இதேபோன்று கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக இல்லை என வடகொரிய செய்தி நிறுவனமும் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஜாங் உன்னிற்கு எவ்வாறு அறுவை சிகிச்சை நடந்தது என தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் தலைநகரான பியாங்காங்கில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹயாங் சன் மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ஜெர்மெனி மற்றும் ஜப்பானில் இருந்து பிரத்யேக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டதாகவும், அவற்றை வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவரே கையாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிம் ஜாங் உன்னிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு கூட கடும் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. தற்போது உன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை அவரது குடும்பத்தினருக்கு என பிரத்யேகமாக கட்டப்பட்டது எனப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com