ஹவாய் தீவில் மீண்டும் வெடித்து சிதறிய எரிமலை.. ஆறுபோல் ஓடும் லாவா குழம்பு #Video

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவ்யா எரிமலை இந்தாண்டில் மூன்றாவது முறையாக வெடித்து நெருப்பு குழம்பை வெளியேற்றியது.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவ்யா எரிமலையில் இருந்து கடந்த மூன்று நாட்களாக லாவா குழம்பு வெளியேறி ஆறுபோல ஓடி வருகிறது. எரிமலையில் இருந்து வெளியாகும் புகைமண்டலம், அப்பகுதி முழுவதும் பரவிவருகிறது.

எரிமலையில் இருந்து பல மீட்டர் தூரத்துக்கு லாவா குழம்பு பாய்ந்தோடிய நிலையில் தற்போது அதன் வேகம் குறைந்துள்ளதாக வீடியோ மற்றும் புகைப்படம் வெளியிட்டு அந்நாட்டு புவியியல் கணக்கீடு மையம் கூறியுள்ளது.

Kilauea volcano in Hawaii
Kilauea volcano in Hawaii

எனினும் எரிமலை வெடிப்பில் தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கையே உள்ளதாகவும், அங்கு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் ஏற்கனவே ஜனவரி மற்றும ஜூன் மாதங்களில் கிலாவ்யா எரிமலை வெடித்து சிதறிய நிலையில், தற்போது மூன்றாவது முறையாக எரிமலை வெடித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com