இனி முகத்தை ஸ்கேன் செய்து கேஃஎப்சியில் சிக்கன் வாங்கலாம்!

இனி முகத்தை ஸ்கேன் செய்து கேஃஎப்சியில் சிக்கன் வாங்கலாம்!
இனி முகத்தை ஸ்கேன் செய்து கேஃஎப்சியில் சிக்கன் வாங்கலாம்!

சீனாவில் உள்ள சிக்கனுக்கு பேர் போன கேஃஎப்சியில் பணம் மற்றும் கடன் அட்டை எதுவும் பயன்படுத்தாமல் முகத்தை ஸ்கேன் செய்தே சிக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

துரித உணவு ரெஸ்டாரண்டில் முகத்தை ஸ்கேன் செய்து பொருள் விற்கும் தொழில்நுட்பத்தை சில்லறை வணிக நிறுவனமான மியூச்சுவல் அலிபாபா அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து கேஃஎப்சியில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. "Smile to Pay" என்றழைக்கப்படும் இந்த புதிய தொழில்நுட்பம் சீன மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முகம் அடையாளம் காண 3D தொழிநுட்ப கேமரா பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவருடைய முகத்தை 2 வினாடிகள் ஸ்கேன் செய்தால் போதும். அதன் பின் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். உங்கள் முகம் ஸ்கேன் செய்யப்பட்டபின் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் உள்ள ஐஎஃப்ஏ-இல் நிறுவனம் இந்த முறையை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com