நியூசிலாந்தில் அமைச்சராகும் முதல் இந்தியப் பெண்...!

நியூசிலாந்தில் அமைச்சராகும் முதல் இந்தியப் பெண்...!
நியூசிலாந்தில் அமைச்சராகும் முதல் இந்தியப் பெண்...!

நியூசிலாந்து வரலாற்றில் முதல்முறையாக இந்திய வம்சாவளி பெண் ஒருவர் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் பிரியங்கா ராதாகிருஷ்ணன் (41).  கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் சென்னையில்தான் பிறந்தார். இவரது உறவினர்களில் பெரும்பாலோர் சென்னையில் வசிக்கிறார்கள்.

சிங்கப்பூரில் வளர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன், பின்னர் நியூசிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்தார். வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் இளநிலையும், பின்னர் வளர்ச்சி ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார். படிப்பு முடித்த பின்னர் ஆக்லாந்தில் சமூக சேவகராக இந்திய மக்களிடையே செயல்பட்டு வந்தார்.

2006ல் பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 2014ல் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2017ல் மீண்டும் போட்டியிட்டு எம்.பி. ஆனார். 2019-ல் இன விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக எம்.பி. ஆக தேர்வாகியுள்ள பிரியங்கா ராதாகிருஷ்ணன், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் அமைச்சரவையில் சமூக நலம், இளைஞர் நலம் மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர தொழில் துறையின் இணை அமைச்சர் பொறுப்பும் இவருக்குக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமைச்சராக வருவது இதுவே முதல்முறை ஆகும். வரும் 6ம் தேதி பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com