”போர் முடியும்வரை இஸ்ரேல் போலீசாருக்கான சீருடையை தைக்க மாட்டோம்”- கேரள நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

கேரளாவில் இயங்கி வரும் சீருடை நிறுவனமான மரியன் அப்பேரல் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது இஸ்ரேலில் அமைதி நிலவும் வரை இஸ்ரேலிய போலீசாருக்கான சீருடை வழங்குவதை நிறுத்துவதாக முடிவு செய்துள்ளது என்று கேரள தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் தெரிவித்துள்ளார்.
சீருடை தடை
சீருடை தடைமுகநூல்

கேரளாவில் இயங்கி வரும் மரியன் அப்பேரல் பிரைவேட் லிமிடெட் என்ற சீருடை நிறுவனமானது இஸ்ரேலில் அமைதி நிலவும் வரை இஸ்ரேலிய போலீசாருக்கான சீருடை தைத்துக் கொடுப்பதை நிறுத்துவதாக முடிவு செய்துள்ளது என்று கேரள தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கூத்துபரம்பில் சீருடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான மரியன் அப்பேரல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. கேரளாவைச் சேர்ந்த தாமஸ் ஒலிக்கல் என்பவர் நடத்தும் இந்நிறுவனத்தில் 1500 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். 95 சதவீத பேர் இதில் பெண்களாக இருக்கின்றனர். இங்கு சர்வதேச அளவில் ஆடைகளை உற்பத்தி செய்தும் வருகின்றனர்.

 மரியன் அப்பேரல் பிரைவேட் லிமிடெட்
மரியன் அப்பேரல் பிரைவேட் லிமிடெட்முகநூல்

இங்கு 2015 ஆம் ஆண்டில் இருந்தே இஸ்ரேலிய காவல்துறையினருக்கு சீருடைகளானது சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் ஏற்பட்டு வரும் போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்பும் வரை இஸ்ரேயலில் இருந்து எந்த வித ஆடர்களையும் எடுக்க வேண்டாம் என்று அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கேரள தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இவர் தனது சமுக வலைதளப்பக்கமான முகநூலில் அவர் தெரிவிக்கையில்,

கேரள தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ்
கேரள தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் முகநூல்

“இந்த போரின் காரணமாக மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட குண்டுவீச்சுக்கு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.

சீருடை தடை
“அவர் ஒரு பொய்யர்” - இஸ்ரேலிய பிரதமரை சாடும் பாலஸ்தீன தூதர்!

எனவே இப்பகுதியில் அமைதி திரும்பும் வரை சீருடைகள் தயாரிப்பு சம்பந்தமாக இஸ்ரேலின் எந்த வித உத்தரவையும் ஏற்க வேண்டாம் என்று மரியன் அப்பேரல்ஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கையையும் அவர்கள் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com