கென்ய அதிபர் தேர்தலில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ரெயிலா ஒடிங்கா திடீரென விலகிக் கொண்டதால் அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் கென்யாட்டா முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது. இதனை உறுதி செய்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்து, 60 நாட்களுக்குள் மறு தேர்தல் நடத்தும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி கென்யாட்டாவும், எதிர்க்கட்சித் தலைவருமான ரெயிலா ஒடிங்காவும் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஒடிங்கா திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து கென்யாட்டா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் துணை அதிபர் வில்லியம் ரூடோ கேட்டுக் கொண்டுள்ளளார்.