கென்யா அதிபர் தேர்தல்: முடிவுகள் வருவதற்குள் சண்டையிடும் கட்சிகள்
கென்யா அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருவதால், வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. மூன்றில் ஒரு பகுதி முடிவு வெளியான நிலையில் தற்போதைய அதிபர் உருகு கென்யாட்டா 55 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
கென்யாட்டாவை எதிர்த்து போட்டியிட்ட ரெய்லா ஓடிங்கா 44 சதவீத வாக்குகளை பெற்றள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்கட்சிகள் நிராகரித்துள்ளன. மேலும் இந்த அறிவிப்பில் உண்மையில்லை எனவும் போலியானது எனவும் ரெய்லா ஓடிங்கா கூறியுள்ளார்.
கென்யாவில் தேர்தல் நேரத்தில் வன்முறைகள் நடப்பது வழக்கமான ஒன்றாகிப் போனதால், தேர்தல் முடிவுகள் முழுமையாக வரும் வரை மக்கள் பொறுமை காக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.