விண்வெளி
விண்வெளிமுகநூல்

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற பெண்கள் குழு!

கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக விண்கலனில் பெண்கள் மட்டும் பயணித்து விண்வெளிக்கு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published on

தொழிலதிபர் ஜெப் பெசாசின் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம், பிரபல பாப் பாடகி Perry உள்ளிட்ட 6 பெண்கள் அடங்கிய குழுவினர் விண்வெளிக்கு சென்று பூமி திரும்பி உள்ளனர்.

காட்டி பெர்ரி உடன், ஜெப் பெசாசின் காதலி லாரன் சான்செஸ் , தொகுப்பாளர் கெய்ல் கிங் , நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஆய்ஷா போவே ஆராய்ச்சியாளர் அமாண்டா குயேன் , திரைப்பட தயாரிப்பாளர் கெரியான் ஃப்லின் ஆகியோரும் New shepherd ராக்கெட் மூலம் விண்ணிற்கு பயணித்தனர்.

விண்வெளி
இந்து வெறுப்புக்கு எதிரான மசோதா | அமெரிக்காவில் முதல்முறையாக நிறைவேற்றம்!

டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்ட நிலையில், 100 கிலோ மீட்டர் பயணித்து அவர்கள் விண்வெளியை அடைந்தனர். தொடர்ந்து, விண்வெளியில் இருந்து பூமியை பார்த்து ரசித்த அவர்கள், 11 நிமிட பயணத்தை நிறைவுசெய்துவிட்டு, பூமிக்கு பத்திரமாக வந்து தரையிறங்கினர். பாராசூட் உதவியுடன் விண்கலனில் வந்திறங்கிய அவர்கள், கண்ணீர் சிந்தியும், பூமிக்கு முத்தமிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக விண்கலனில் பெண்கள் மட்டும் பயணித்து விண்வெளிக்கு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com