காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்
Published on

ஜம்மு காஷ்மீரில் பாது‌காப்புப் படை வீரர்கள் மீதான பயங்கரவா‌த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிஆர்பி‌எப் வீரர்‌களை‌ குறிவைத்து ‌நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்திற்குரியது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் தெரிவித்துள்ளார். உயிரிழந்ததோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்‌கல் தெரிவித்த அவர், பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அதனை தோற்கடிக்கவும் இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று கூறியுள்ளார். 

புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிழிந்த வீரர்களின் குடும்பத்திற்கு அவர் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பயங்வாத தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் வங்கதேசம் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். 

இதேபோல் நேபாள பிரதமர் கேபி சர்மா, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என பிரான்ஸ் அரசு கூறியுள்ளது. இதேபோல் ரஷ்யா, பூடான், மாலத்தீவு ஆகிய நாடுகளும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com