ஸ்டெர்லைட்டுக்கு எதிராக காங்கோவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக காங்கோவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக காங்கோவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள், அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் தொடர் போராட்டம் நடத் தி வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று 48-வது நாளாக நீடிக்கிறது. ஏராளமான ஆண்களும், பெண்களும் இதில் குவிந் துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆயிரக்கணக்கானோர் திரண்ட பிரமாண்டமான கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பொதுமக்கள் மற்றும் மா ணவர்கள் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரின் வீட்டின் முன்னால் தமிழர்கள் போராட்டம் நடத்தி னர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்த எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றத்தின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மீத்தேன், நியூட்ரினோ திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் குழந்தைகள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்று தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com