ஆஸ்திரேலியாவில் மதுபானக் கடைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த கங்காரு! வைரல் வீடியோ!

ஆஸ்திரேலியாவில் மதுபானக் கடைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த கங்காரு! வைரல் வீடியோ!

ஆஸ்திரேலியாவில் மதுபானக் கடைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த கங்காரு! வைரல் வீடியோ!
Published on

ஆஸ்திரேலியாவில் மதுபானக் கடை ஒன்றில் திடீரென ஒரு கங்காரு நுழையும் வீடியோ வைரலாகி வருகிறது.

கங்காருக்கள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை. அவை ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. எனவே பொது இடங்களில் மக்கள் மத்தியில் கங்காருக்கள் வருகை புரிவது அங்கு இயல்பானது. ஆனால், கங்காரு மதுபானக் கடைக்கு வருகை புரிவது கொஞ்சம் புதியது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு அழையா விருந்தாளியாக கங்காரு ஒன்று வருகை புரிந்தது. வாடிக்கையாளர் வரிசையில் நின்று கொண்டிருக்க, கங்காரு உள்ளே நுழைந்து அமைதியாகச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Shared post on

கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அந்த கங்காருவை எந்த தொந்தரவும் செய்யாததால், அது அமைதியாக கடையை விட்டு வெளியேறி விட்டது. "australian.animals" இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Unexpected Visitor” என்ற தலைப்பிட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com