கத்தாரில் விற்பனைக்கு வந்த ஆவின் பாலகம்

கத்தாரில் விற்பனைக்கு வந்த ஆவின் பாலகம்

கத்தாரில் விற்பனைக்கு வந்த ஆவின் பாலகம்
Published on

கத்தாரில் ஆவின் பால் சக்கைபோடு போடப்போகிறது என கத்தாரில் ஆவின் விற்பனையை தொடங்கி வைத்த பின் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிகமாக விற்பனையாகும் ஆவின் பாலுக்கு வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. திரவ உணவை பதப்படுத்தும் முறையான ultra-pasteurization முறையில், பாலை கொதிக்க வைத்து பதப்படுத்தி ஒரு லிட்டர் அளவில் பேக் செய்து வெளிநாடுகளுக்கு ஆவின் சப்ளை செய்து வருகிறது. 

இவ்வாறு அனுப்பப்படும் பால் குறைந்தது 6 மாதங்கள் வரை கெடாது. இந்தப் பாலை குளிர்சாதன பெட்டியிலும் அடைக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அடைக்கப்பட்டு அனுப்பப்படும் ஆவின்  பாலானது வெளிநாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் போன்ற பிரபல கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆவின் பாலை, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின்பால் கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழக முதல்வர் ஆலோசனையின்படி கத்தார் நாட்டுக்கு ஆவின் பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்தது. அதனை தொடர்ந்து கத்தார் நாட்டில் ஆவின் விற்பனையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்துள்ளார்.

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் கிடைக்கும் இட்லி,வெண்பொங்கல், வடை உள்ளிட்டவை கடல் கடந்து கிடைப்பதாகவும்,ஆவின் பால் கத்தாரில் சக்கைபோடு போடப்போகிறது எனவும், நல்ல பொருட்களை, தரமான பொருட்களை வாங்குவதில் கத்தார் நாடு முனைப்பு காட்டி வருவதாகவும் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com