உலகம்
ஆப்கனில் இருந்து தப்பமுயன்ற இளம் கால்பந்து வீரர் மரணம்
ஆப்கனில் இருந்து தப்பமுயன்ற இளம் கால்பந்து வீரர் மரணம்
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அந்நாட்டைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் ஒருவரும், விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
19 வயதான சாகி அன்வாரி, ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடியவர். ஆப்கானில் தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அங்கிருந்து ஏராளமானார் விமானங்களின் சக்கரங்கள், இறக்கைகளில் அமர்ந்து ஆபத்தமான முறையில் பயணம் செய்தனர். அவ்வாறு பயணம் செய்து உயிரிழந்தவர்களில் சாகி அன்வாரியும் ஒருவர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான விமானத்தில் சென்றபோது அவர் உயிரிழந்தார். இளம் கால்பந்து வீரரின் மறைவுக்கு சக வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.