\
Animal-to-Human Disease
Animal-to-Human Diseaseweb

ஜூலை 6 உலக விலங்குவழி நோய் நாள்.. ஆண்டுக்கு 250 கோடி மக்கள் பாதிப்பு!

நாம் எதிர்கொள்ளும் புதிய நோய்களில் கிட்டத்தட்ட 75% விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் 'ஜூனோடிக்' வகை நோய்களாகும். காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றமே இதற்கு முக்கியக் காரணங்கள்.
Published on

விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜூலை 6-ஆம் தேதி 'உலக ஜூனோசிஸ் தினம்' (World Zoonoses Day) கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா, Mpox (குரங்கு அம்மை), பறவைக் காய்ச்சல் எனத் தொடரும் நோய்த்தொற்றுகள் மனித குலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணிகள். உலக சுகாதார நிறுவனத்தின்படி, நாம் எதிர்கொள்ளும் புதிய நோய்களில் கிட்டத்தட்ட 75% விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் 'ஜூனோடிக்' வகை நோய்களாகும். காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றமே இதற்கு முக்கியக் காரணங்கள்.

Animal-to-Human Disease
Animal-to-Human Diseaseweb

உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 250 கோடி மக்கள் இந்த விலங்குவழி நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்; இதில் 27 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, ரேபிஸ் நோயால் மட்டும் ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு நபர் உயிரிழக்கிறார் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை. நேற்று ரேபிஸ், டெங்கு என்றால், இன்று அது நிபா மற்றும் எபோலா என உருமாறி நிற்கிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகளை வெறும் நோய்களாகப் பார்க்காமல், மனித குலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

1885 ஜூலை 6 அன்று, லூயிஸ் பாஸ்டர் வெறிநாய்க்கடிக்கான முதல் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். மருத்துவ வரலாற்றின் இந்த மைல்கல் சாதனையை நினைவுகூரவே ஆண்டுதோறும் ஜூலை 6 'உலக விலங்குவழி நோய் நாள்' எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆரம்பக்கட்ட விழிப்புணர்வு மூலம் இந்த ஆபத்துகளை 80% வரை தடுத்து நிறுத்த முடியும்.

Animal-to-Human Disease
Animal-to-Human Diseaseweb

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்குத் தவறாமல் தடுப்பூசி போடுவது, நோய் பாதிப்புள்ள விலங்குகளிடமிருந்து தள்ளி இருப்பது மற்றும் இறைச்சிகளை நன்றாக வேகவைத்து உண்பது போன்ற எளிய பழக்கங்களே நமக்கான தற்காப்பு வளையங்கள். வருமுன் காப்பதே நம் எதிர்காலச் சந்ததியைக் காப்பதற்கான ஒரே ஆயுதம்.

Animal-to-Human Disease
விண்வெளி கழிவுகளால் ஆபத்து; எலான் மஸ்கின் புதிய திட்டம் - அதிர்ச்சித் தரவுகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com