உலகம்
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே பதவி நீக்கம் முடிவு செய்யப்பட்டது: நவாஸ் ஷெரிஃப்
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே பதவி நீக்கம் முடிவு செய்யப்பட்டது: நவாஸ் ஷெரிஃப்
பிரதமர் பதவியில் இருந்து தன்னை தகுதி நீக்கம் செய்யும் முடிவு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னரே எடுக்கப்பட்டுவிட்டதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிஃப் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் தன்னை தகுதி நீக்கம் செய்ய கூறப்பட்ட காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என மக்கள் விவாதிப்பதாகவும் கூறியுள்ளார். ஒரு பைசா கூட தான் தவறாக சம்பாதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் பிரிவினை ஏற்படுத்திய முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரப்பின் மீது இது போன்றதொரு கடுமையான நடவடிக்கையை எடுக்குமா எனவும் சவால் விட்டுள்ளார்.