\
Jordan Church Shooting Kills 7, Injures Over 28
ஜோர்டன் துப்பாக்கிச்சூடுReuters

ஜோர்டனில் பயங்கரம் | தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு.. குறைந்தது 7 பேர் கொ*ல!!

ஜோர்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 34-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

மேற்கு ஆசிய நாடான ஜோர்டனின் தெற்குப் பகுதியில், கிறிஸ்துவர்கள் சிறுபான்மையினராக வசிக்கும் பகுதி கராக் (Karak). வெள்ளிக்கிழமையான இன்று, அப்பகுதியில் உள்ள ஒரு தேவாலயம் ஒன்றில், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில், ஏரளமான பொதுமக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தேவாலயத்தின் உள்நுழைந்து, அங்கிருந்த மக்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பலரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேவாலயத்தின் நாலாபுறமும் ஓடியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஜோர்டன்
ஜோர்டன்Reuters

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணவும், அவர்களைப் பிடிக்கவும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வரை, இந்தத் தாக்குதலில் 7 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 34 காயமடைந்திருப்பதாக அந்நாட்டின், உள்துறை அமைச்சர் மாசென் அல்-ஃபராயா தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலுக்கான காரணம் என்ன, இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும் அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் வெளியாகவில்லை. இதுதொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேவாலயம் ஒன்றின் உள்நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதல் சர்சவதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Jordan Church Shooting Kills 7, Injures Over 28
iPhone Hack? ட்ரம்பின் மருமகனுக்கு கைமாறிய ரூ.35,000 கோடி? வெளியான அதிர்ச்சித் தகவல்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com