\
அமெரிக்காவை அச்சுறுத்தும் கொடூர கொரோனா... 24 மணி நேரத்தில் 1509 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொடூர கொரோனா... 24 மணி நேரத்தில் 1509 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொடூர கொரோனா... 24 மணி நேரத்தில் 1509 பேர் உயிரிழப்பு
Published on

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 1509 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்கா அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,50,000 ஐ தாண்டியுள்ளது எனவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,529 ஆக உள்ளது எனவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால்  1509 பேர் இறந்துள்ளதாக  ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,514 ஆக இருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com