“வெள்ளையின வாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும்” - அதிபர் ஜோ பைடன் உரை

“வெள்ளையின வாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும்” - அதிபர் ஜோ பைடன் உரை
“வெள்ளையின வாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும்” - அதிபர் ஜோ பைடன் உரை

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அதேபோல், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றார்.

ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கும் நான் அதிபராக இருப்பேன் என்று அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் கூறியுள்ளார். பதவியேற்ற பின்னர் ஜோ பைடன் ஆற்றிய உரையில், “இது அமெரிக்காவின் நாள்; இது ஜனநாயகத்தின்நாள். அமெரிக்க வரலாறு பல்வேறு போராட்டங்கள் நிறைந்தது. அமெரிக்காவில் பல அழுத்தங்களை கடந்து மக்களாட்சி நீடித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன் தான் மக்களாட்சியை வன்முறை ஆட்டி படைத்தது. கொரோனா வைரஸ் ஏராளமான மக்களின் உயிரை பறித்துள்ளது. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன.

நாட்டை ஒன்றிணைப்பதற்கு ஒட்டுமொத்த மக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். பெருந்தொற்று, வன்முறைகள் போன்றவற்றை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சவால்களை எதிர்கொள்வதிலும், உலகளாவிய அமைதி, பாதுபாப்பை முன்னேற்ற ஒற்றுமையுடன் செயல்படுவோம். ஒற்றுமையுடன் இருந்தால் எந்த காலத்திலும் நாம் தோற்கமாட்டோம். ஒற்றுமை இல்லாமல் அமைதி நிலைக்காது. அமெரிக்க மக்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

வெள்ளையின வாதம், உள்நாட்டு பயங்கரவாதம் உள்ளிட்டவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மார்டின் லூதர் கிங்கின் கனவுகளை இந்த தருணத்தில் நினைவுகூர்கிறேன். ஒருவருக்கொருவர் மரியாதையுடனும், இணக்கமாவும் இருக்க வேண்டும்.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com