அதிபர் ஜோ பைடன்முகநூல்
உலகம்
"அதிபர் தேர்தலில் தான் போட்டியிட்டிருந்தால்...."-அதிபர் ஜோ பைடன்!
தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வது என்பது சந்தேகம் தான் என கூறினார்.
அதிபர் தேர்தலில் தான் போட்டியிட்டிருந்தால், டொனால்டு ட்ரம்பை வீழ்த்தி இருப்பேன் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு தனக்கு அதிகமாக இருந்ததாக தெரிவித்தார். அதேசமயம், தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வது என்பது சந்தேகம் தான் என கூறினார். அதோடு, தனது 86 வயது வரை அதிபராக இருக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லாத காரணத்தால் தான், தனக்கான வாய்ப்பை மற்றொருவருக்கு வழங்கியதாக ஜோ பைடன் தெரிவித்தார்.