இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு இதுதான் காரணமா? அமெரிக்க அதிபர் பைடன் கருத்து!

அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பொருளாதார பாதைத்திட்டம், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு ஒருகாரணமாக இருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பிய பொருளாதார பாதைத்திட்டம்
இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பிய பொருளாதார பாதைத்திட்டம் முகநூல்

“அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பொருளாதார பாதைத்திட்டம், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு ஒருகாரணமாக இருக்கக்கூடும்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்ஃபேஸ்புக்

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல், அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலால் இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஹமாஸ் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட திட்டமும் ஒரு காரணம் என்ற கருதுகோளை பைடன் முன்வைத்தார்.

துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள துறைமுகங்கள் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி- இறக்குமதி வணிகத்துக்கான வழித்தடங்களை அமைப்பது இந்தியாவின் திட்டம். இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பிய பொருளாதார பாதைத்திட்டம்
F16 விமானங்கள் மூலம் தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்; காஸா மீது தீவிரப்படுத்தப்படும் தாக்குதல்

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக விளங்கும் இஸ்ரேலும் இந்த திட்டத்தில் பங்களிப்பை விரும்புகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டுக்கு பிறகு இந்தியா-சவுதி பேச்சுவார்த்தைக்காக டெல்லியில் தங்கியிருந்த இளவரசர் முகமது சல்மான் தனது குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார் .

இளவரசர் முகமது சல்மான்
இளவரசர் முகமது சல்மான்முகநூல்

சீனாவின் "பெல்ட் அண்ட் ரோடு" போக்குவரத்து திட்டத்துக்கு இந்தியா-ஐரோப்பா திட்டம் போட்டியாக கருதப்படுகிறது. ஆகவே சீனா, ஈரான், ரஷ்யா, வட கொரியா ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது தாக்குதலை தூண்டி விட்டிருக்கலாம் என்பது பைடனின் கருத்தாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com