திசை திரும்பும் போர்.. இஸ்ரேலுக்கு அட்வைஸ் பண்ண ஜோ பைடன்!

இஸ்ரேலின் நூற்றுக்கணக்கான தரைப்படை பீரங்கிகள், 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து காஸா நகரை நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபர்PT

இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் குழுவினரிடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையே 10ஆவது நாளாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலின் ராணுவம், முப்படைகள் மூலம் காஸா நகரை தாக்கி வருகிறது.

அமெரிக்க அதிபர்
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் உருக்குலைந்த காஸா நகரம்...

இஸ்ரேலின் நூற்றுக்கணக்கான தரைப்படை பீரங்கிகள், 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து காஸா நகரை நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸா நகரை நோக்கி 3,60,000 ராணுவ வீரர்களைக் கொண்ட இஸ்ரேலியராணுவப் படை மிக வேகமாக முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சூழலில், தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்த நேர்க்காணலில், காஸா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் “ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதற்கு உறுதுணையாக இருப்போம். ஆனால் ஒருபோதும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர்
“அல்குவைதா பயங்கரவாதிகளைவிட ஹமாஸ் அமைப்பினர் மிகவும் மோசமானவர்கள்” - ஜோ பைடன்

10 நாட்களாக போர் நீடித்து வரும் சூழலில், காசா நகரில் இதுவரை 2,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய யூத மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற விரைவில் ரஃபா எல்லை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, எகிப்து எல்லையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலஸ்தீன மக்கள் வாகனங்களில் அணிவகுத்து நிற்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com