\
என்விடியா முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங்
என்விடியா முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங்REUTERS

மீண்டும் CEO ஆகிறாரா ஜென்சன் ஹுவாங்?... அதிரடி முடிவெடுத்த ஊழியர்கள்

என்விடியா நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியமர்த்துவதற்காக 'வார் ரூம்' அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரபரப்பை கிளப்பியிருக்கும் விவகாரத்தின் பின்னணியில் இருப்பது என்ன என்பது குறித்து பார்க்கலாம்...
Published on: 

உளவாளி மற்றும் அலுவலகத்தில் உயர் பதவியில் பணியாற்றிவர்களுடன் இருந்த உறவு காரணமாக என்விடியா சிஇஓ ஆக இருந்த ஜென்சன் ஹுவாங்கிற்கு கண்டனங்கள் வலுத்தன. சிப் தயாரிப்பு நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்தவரின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பேசுபொருளானது. நிறுவனத்தின் பங்குகள் தொடர் சரிவை சந்தித்த நிலையில், என்விடியா நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து அண்மையில் விலகினார் ஜென்சன் ஹுவாங். இதையடுத்து நிறுவனத்திற்கு புதிய சிஇஓவை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது என்விடியா நிறுவனம். ஆனால், அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், ஜென்சன் ஹுவாங்கையே மீண்டும் சிஇஓ ஆக்க ஒருதரப்பு முயன்று வருவதாக செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.

Nvidia
NvidiaReuters

தொடக்கத்தில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்த ஜென்சன் ஹுவாங்கே, தற்போது மீண்டும் தனது பதவிக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தனது நம்பிக்கைக்கு பாத்தியப்பட்டவர்களுடன் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஜென்சன் ஹுவாங்கிற்கு ஆதரவு அளிக்கக் கூடிய சிலிகான் வேலியைச் சேர்ந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் வார் ரூம் ஒன்றை அமைத்திருப்பதாக ஃபைனான்ஸ் டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஜென்சன் ஹுவாங் மீது நிறுவனத்தினர் பலரும் நன்மதிப்பு வைத்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டுமென்பதற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் மனு ஒன்றில் கையெழுத்து போட்டிருப்பதாக தெரிகிறது. ஜென்சன் இல்லாமல் என்விடியா நிறுவனம் தனது முக்கியமான ஒப்பந்தங்களை இழக்கும் எனவும், வாய்ப்பிருந்தால் அவரைப் போன்ற ஒருவரை நான் என் நிறுவனத்தில் பணியமர்த்துவேன் என்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இது தவிர ஜென்சனுக்கு வெள்ளை மாளிகை தரப்பில் இருந்தும் ஆதரவு திரட்டும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் மீண்டும் சிஇஓ பதவிக்கு ஜென்சன் ஹுவாங் முயற்சித்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.