பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்தாரா? ஜெய்ஷ் இ முகமது மறுப்பு

பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்தாரா? ஜெய்ஷ் இ முகமது மறுப்பு
பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்தாரா? ஜெய்ஷ் இ முகமது மறுப்பு

பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழக்கவில்லை என்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தெரிவித்துள்ளது. 

புல்வாமாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்கு எதிராக இந்தியாவில் கொந்தளிப்பு மனநிலை ஏற்பட்டது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிக ரித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமா னப் படை சரமாரியாகக் குண்டுகளை வீசியது. இந்தத் தாக்குதலில் பயங்கவாத முகாமில் இருந்த சுமார் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலை உறுதிப்படுத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பு, இதில் யாரும் பலியாகவில்லை என்று மறுத்திருந்தது. 

இந்நிலையில் இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் உயிரிழந்துவிட்டான் என உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் நேற்று வெளியாயின. இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் மசூத் அசார் காயம் அடைந்து, மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டிருந்த அவன் உயிரிழந்து விட்டான் எனவும் அவனது நெருங்கிய கூட்டாளியான சலீம் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்த தகவலை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மறுத்துள்ளது. அவன் நலமாக உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மசூத் அசார் உடல் நிலை சரியில்லாமல் ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த மருத்துவமனையில் இருந்து மசூத் அசாரை பகவால்பூரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று (ஞாயிறு) மாலை 7.30 மணியளவில் மாற்றியுள்ளனர். இதை வைத்து அவர் மரணமடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com