உலகம்
பொழுதுபோக்குக்காக செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கக்கூடாது - அமெரிக்க ஏவியேஷன்
பொழுதுபோக்குக்காக செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கக்கூடாது - அமெரிக்க ஏவியேஷன்
பொழுதுபோக்குக்காக விண்வெளிக்குச் செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கக்கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது அமெரிக்கா.
அமெரிக்க கோடீஸ்வரர்களான ஜெஃப் பெசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வெற்றிகரமாக திரும்பினர். மேலும் விண்வெளி சுற்றுலாவுக்கு இவர்களது நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்கிடையில், விண்வெளிக்கு சுற்றுலா நிமித்தமாக செல்லும் கோடீஸ்வரர்களை 'விண்வெளி வீரர்கள்' என அழைக்கப்படுவது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அமைப்பு, பொழுதுபோக்குக்காக விண்வெளிக்கு செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சுற்றுலா செல்பவர்கள் விண்வெளிக்கு சென்றாலும் சுற்றுலா பயணிகள்தான். அவர்களால் விண்வெளி வீரர்கள் ஆக முடியாது. இவர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைப்பதன் மூலமாக எதிர்கால தலைமுறையினருக்கு தொழில்முறை விண்வெளி வீரர்களின் அருமை பெருமைகள் தெரியாமல் போய்விடும். ஆகவே ஜெஃப் பெசோஸ், ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட தொழிலதிபர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைக்கக்கூடாது என்று அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.