அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் இடத்தில் யார் ?

அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் இடத்தில் யார் ?

அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் இடத்தில் யார் ?
Published on

அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஸோஸ் இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். விவாகரத்து ஆன நிலையில், ஜெஃப் பிஸோஸ் தனது மனைவி மெக்கன்ஸிக்கு ஏரளாமான சொத்துக்களை வழங்கியதால், அவரும் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 2.2 சதவிகிதம் உயர்ந்து 2.96 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது. அதில், அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிஸோஸ் சுமார் 7 லட்‌சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் இந்த ஆண்டும் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 7 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சுமார் 5 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாயுடன் வாரன் பஃபெட் மூன்றாவது இடத்தி‌ல் உள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸின் மனைவி மெக்கன்சி, 2 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதன்முறையாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் 15-ஆவது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த முறை 15 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் 275-ஆவது இடத்தை பிடித்துள்ளார். ட்ரம்பின் சொத்து மதிப்பு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com