ஏவுகணை சோதனை நடத்தப்பட்டால் தப்பிப்பது எப்படி என்று ஜப்பானின் சகட்டா நகரில் ஒத்திகை நடத்தப்பட்டது.
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக ஜப்பானில் இதுபோன்ற ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பான இடத்தில் பதுங்கியிருக்க அப்போது அறிவுறுத்தப்பட்டது. வடகொரியாவில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட வோன்சன் நகரில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஜப்பானின் எல்லையான சகட்டா இருக்கிறது. வடகொரியாவில் ஏவுகணை ஏவப்பட்டால் இங்கு 10 நிமிடங்களில் வந்துவிடும். இதனால் ஜப்பான் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.