உலகம்
ஜப்பானில் ஆட்சியை தக்க வைத்தார் அபே: பிரதமர் மோடி வாழ்த்து
ஜப்பானில் ஆட்சியை தக்க வைத்தார் அபே: பிரதமர் மோடி வாழ்த்து
ஜப்பானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் பிரதமர் ஷின்சோ அபேவின் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் கட்சியின் தலைவராக அபே மூன்றாவது முறையாக பொறுப்பேற்பதற்கான வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது. மொத்தம் உள்ள 465 தொகுதிகளில் அபேவின் சுதந்திர ஜனநாயக கட்சியும், அதன் கூட்டணி கட்சியும் 312 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அபே, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் வடகொரியாவுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அபே வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.