பெண்களுக்கு அனுமதியில்லாத தீவு - பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்தது

பெண்களுக்கு அனுமதியில்லாத தீவு - பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்தது

பெண்களுக்கு அனுமதியில்லாத தீவு - பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்தது
Published on

ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதிப்படும் ஜப்பானின் ஒகினோஷிமா தீவு யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றது. 

ஜப்பானில் உள்ள ஒகினோஷிமா என்ற தீவு மிகவும் பிரபலம். இந்த தீவிற்கு செல்ல பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கியூஷு மற்றும் கொரியன் என்ற பகுதிக்கு நடுவே அமைந்துள்ள இந்த 270 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவு பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது. இந்த தீவு புனிதமான தீவாக ஜப்பானியர்களால் கருதப்படுகிறது. இந்த தீவில் முனகட்டா கோவிலில் உள்ள 3 பெண் கடவுள்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விழா நடக்கும். அப்போது மட்டுமே, அங்கு ஆண்கள் செல்ல முடியும். மற்ற நாட்களில் ஷிண்டோ என்ற ஒரே ஒரு பூசாரிக்கு மட்டுமே தீவிற்குச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

கோயிலுக்குச் செல்பவர்கள் ஆண்களாக இருக்க வேண்டும், அத்துடன் நிர்வாணமாகக் கடலில் குளித்து, தங்களை புனிதப்படுத்திக் கொண்டு கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இதன் காரணமாக இத்தீவிற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

தீவிற்கு பார்வையாளர்கள் வருகைக்குத் தடை விதிக்க கோயில் நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர். பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமானால், அது தீவையே அழித்துவிடும் என்று எண்ணுவதால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

இந்த தீவுக்கு செல்ல அதிக கட்டுப்பாட்டுடன் ஆண்டுக்கு 200 ஆண்கள் மட்டுமே, அதுவும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. பல அரியவகை பொருட்களும், ஜப்பானின் பழைய கால பொக்கிஷங்களும், அந்த தீவில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை அந்நாட்டின் கலாச்சார பழக்கவழக்கங்களை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இந்த தீவிலிருந்து எந்த பொருளையும் எடுத்து செல்லவும், விட்டுச்செல்லவும் அனுமதியில்லை என அந்த தீவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com