அனிமேஷன் பெண்ணுடன் நடைபெறும் திருமணத்திற்கு சான்றிதழ் வழங்கும் ஜப்பான் அரசு!
ஜப்பானில் அனிமேஷன் பெண்ணுடன் நடைபெறும் திருமணத்திற்கு அந்நாட்டு அரசு முறையான திருமண சான்றிதழ் வழங்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஜப்பான் நகரில் உள்ள ஆண்கள் தங்களுக்கு விருப்பமான அனிமேஷன் பெண்களை திருமணம் செய்து கொள்ளுவது அதிகரித்து வருகிறது. இதனை அறிந்த ‘கேட்பாக்ஸ்’ என்ற ஆன்லைன் தனியார் நிறுவனம் ஒன்று அனிமேஷன் பெண்களை மணப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை உருவாகிக்கி உள்ளது. இதன்படி ஆண்கள் தங்களுக்கு விருப்பமான அனிமேஷன் பெண்ணை தேர்வு செய்து, அவர்களுடன் திருமணம் செய்துக் கொள்ளலாம். மேலும் இந்த திருமணத்தை அரசிடம் அங்கீகாரம் பெற்று முறைப்படி திருமண சான்றிதழும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அனிமேஷன் பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு அதிகப்படியான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த திருமண தம்பதிகள் 6 மாத காலம் எந்த பிரச்னையும் இன்றி வாழ்ந்தால் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 உதவித்தொகையும், சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இதுபோன்ற அனிமேஷன் திருமணங்கள் அதிகரிப்பதற்கு காரணமும் ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதில் அனிமேஷன் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மனதளவில் எந்த குழப்பங்களும் இன்றி அலுவலகத்தில் வேலை செய்வதாகவும், அதேபோல் தேவையின்றி விடுமுறை எடுப்பதை தவிர்ப்பதால் இந்த திருமணம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் தன் கண்டுப்பிடிப்புகளால் நிமிர்ந்து பார்க்க வைக்கும் ஜப்பான் அரசு இந்த அனிமேஷன் திருமணத்தையும் ஊக்குவித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது.