ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தொப்பிகளை அன்பளிப்பாக வழங்கினார்.
ஆசிய நாடுகளின் 12 நாட்கள் சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக ஜப்பான் சென்றிருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்தார். கோல்ப் மைதான கிளப்பில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இதனை அடுத்து ஜப்பான் பிரதமர், ட்ரம்ப்புக்கு தொப்பிகளை அன்பளிப்பாக வழங்கினார். உலகில் சர்வாதிகாரியாக விலங்கும் யாரும் அமெரிக்காவை குறைத்து மதிப்பிட்டக் கூடாது என வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ட்ரம்ப் பேசினார்.