அணுகுண்டுகள் அற்ற உலகத்தை உருவாக்குவதே லட்சியம்: ஜப்பான் பிரதமர் உறுதி

அணுகுண்டுகள் அற்ற உலகத்தை உருவாக்குவதே லட்சியம்: ஜப்பான் பிரதமர் உறுதி

அணுகுண்டுகள் அற்ற உலகத்தை உருவாக்குவதே லட்சியம்: ஜப்பான் பிரதமர் உறுதி
Published on

ஜப்பான் நாட்டின் நாகசாகி நகரில் அணுகுண்டு வீசப்பட்டதன் 73-ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 1,40,000 பேர் கொல்லப்பட்டனர். மூன்று நாட்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகசாகி மீது "பேட் மேன்" என்கிற மற்றொரு அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இந்தத் தாக்குதலில் 70,000 பேர் பலியாயினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நாகசாகி நகரில் அணுகுண்டு வீசப்பட்டதன் 73-ஆவது நினைவு நாளையொட்டி, நாகசா‌கி அமைதிப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்று, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், அணுகுண்டுகள் அற்ற உல‌கத்தை உருவாக்குவதே தமது லட்சியம் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com