ட்ரம்புக்கு பக்க பலமாக இருப்போம்: ஜப்பான் பிரதமர் அபே உறுதி
வடகொரியா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பக்க பலமாக இருப்போம் என்று ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்துள்ளார்.
தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. இதற்கு, சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த எதிர்ப்புகளையும் மீறி, சோதனைகளை வடகொரியா நடத்திவருகிறது. அதனால் வடகொரியா மீது, ஐ.நா சபை பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இருப்பினும் அதனையெல்லாம் வடகொரியா பொருட்படுத்தவில்லை. வடகொரியாவின் தொடர் சோதனைகள் அமெரிக்காவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏவுகணை சோதனைகளை நிறுத்தாவிட்டால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று வடகொரியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதனிடையே, ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பக்க பலமாக இருப்போம் என்று அபே கூறியுள்ளார். ஜப்பான் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற அக்டோபர் 22-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.