james harrison blood donor died
james harrison blood donor diedweb

‘Man with the Golden Arm' | ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றியவர் உயிரிழப்பு

ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றிய நபர் தனது 88 வயதில் காலமாகியுள்ளார். அப்படி அவரது ரத்தத்தில் என்ன இருக்கிறது, இவ்வளவு உயிர்களை எப்படி காப்பாற்றினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
Published on

ஜேம்ஸ் ஹாரிசன் என்பவர் பிப்ரவரி 17, 2025 அன்று தனது 88 வயதில் காலமானார். ஆஸ்திரேலிய வம்சாவளியைச் சேர்ந்த ஹாரிசனின் இரத்த தானம் மூலமாக உலகளவில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.

james harrison blood donor died
'RuPay Select Debit Card' உங்ககிட்ட இருக்கா? ஜிம் முதல் ஏர்போர்ட் வரை.. இவ்வளவு சலுகைகளா?

அவருடைய ரத்தத்தில் என்ன இருக்கிறது?

ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் Anti-D எனப்படும் ஒரு அரிய வகை ஆன்டிபாடி இருப்பது கண்டறியப்பட்டது. இது கருவில் இருக்கும் குழந்தையை அதன் தாயின் ரத்தம் தாக்கும் அபாயம் இருக்கக் கூடிய கர்ப்பிணிகளுக்கு சரிசெய்ய கொடுக்கப்படும் மருந்துகளைத் தயாரிக்க இந்த ஆன்டிபாடி பயன்படுகின்றது.

ஜேம்ஸ் ஹாரிசனுக்கு 14 வயதில் பெரிய மார்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அவருக்கு ஏராளமான இரத்தமாற்றங்கள் தேவைப்பட்டன. எனவே இதனை அடுத்து அவர் இரத்த தானம் செய்ய 18 வயதில் தொடங்கினார். அப்போது அவரது இரத்தத்தில் அரிய ஆன்டி-டி ஆன்டிபாடி இருப்பது கண்டறியப்பட்டது. HDN க்கான சிகிச்சைகளை உருவாக்குவதில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமானது.

james harrison blood donor died
james harrison blood donor died

ஆறு தசாப்தங்களாக, ஜேம்ஸ் ஹாரிசன் 1,173 இரத்த தானம் செய்திருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு பல அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தனிநபர அதிக இரத்த தானம் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார்.

ஹாரிசனின் இரத்தத்திலிருந்து பெறப்பட்ட ஆன்டி-டி தடுப்பூசி உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது HDN-ன் அபாயகரமான விளைவுகளிலிருந்து மில்லியன் கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கிறது. எனவே இவரை ‘Man with the Golden Arm' என அழைத்து கவுரப்படுத்தினர்.

james harrison blood donor died
5 ஆண்டுகளுக்கு முந்தைய பகை.. ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெறுக்க இதுதான் காரணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com