“பல நாள் திட்டமிட்டு பத்திரிகையாளர் ஜமால் கொலை”- வீடியோ ஆதாரம் வெளியிட்டது துருக்கி

“பல நாள் திட்டமிட்டு பத்திரிகையாளர் ஜமால் கொலை”- வீடியோ ஆதாரம் வெளியிட்டது துருக்கி

“பல நாள் திட்டமிட்டு பத்திரிகையாளர் ஜமால் கொலை”- வீடியோ ஆதாரம் வெளியிட்டது துருக்கி
Published on

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டார் என்பதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றை துருக்கி அரசு வெளியிட்டுள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அதன்பின்னர் மாயமானார். கஷோக்கியை சவுதி தூதரகத்திலேயே அதிகாரிகள் கொலை செய்துவிட்டதாகவும் இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் இருப்பதாக துருக்கி அரசு ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி தற்போது வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜமால் தூதரகத்திற்குள் சென்ற நாளன்று சிறிது நேர இடைவெளியில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சுமார் 15 பேர் உள்ளே சென்றதாவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் கார்கள் அருகே சூட்கேஸ் இருப்பதும், சிறிது நேரத்தில் கார்கள் அடுத்தடுத்து புறப்படுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதன்மூலம் ஜமால் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாகங்களுடன் அந்த கார்கள் வெளியே சென்றிருக்கலாம் என துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பல நாள்களாகத் திட்டமிடப்பட்டு ஜமால் செய்யப்பட்டதாக துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் குற்றம்சாட்டியுள்ளார். கஷோகியின் கொலை கொடூரமான முறையில் அரங்கேற்றப்பட்டிருப்பதாகவும், தொடர்புடைய அனைவரையும் துருக்கிக்கு அழைத்து வந்து விசாரிக்கப் போவதாகவும் எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக சவுதி அரேபியாவிடம் இருந்து வரும் தகவல்கள் திருப்திகரமாக இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com