உலகம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கனடாவில் தமிழர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கனடாவில் தமிழர்கள் போராட்டம்
கனடாவின் அல்பர்ட்டாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு காளைகள் படத்துடனும், ஜல்லிக்கட்டு ஆதரவு வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளுடனும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழர் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டுத்தரக்கூடாது என்றும் ஜல்லிக்கட்டுக்கு இனி எந்த காலத்திலும் தடை வராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.